வீடியோ

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நாவுக்கு இலகுவான இரு வார்த்தைகள்

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


ஈத் அல்பித்ர் நல் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு  அலைக்கும்  (வரஹ்)
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரர்கள்  அனைவருக்கும் எங்கள்  அன்பான

ஈத் அல்பித்ர்  நல் வாழ்த்துக்கள்

அல்லாஹ் நம் அனைவர்களின்  பாவங்களையும்  மன்னித்து 
உயர்தரமான  ஜன்னத்  அல்பிர்தவ்ஸ்  என்ற சொர்கத்தில் 
கண்ணியம் வாய்ந்த மாமனிதர்  நபிகளார்                     
ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்  அவர்களோடு
ஒன்றாக  வாழும்பாக்கியத்தை  தந்தருள்வானாக.  ஆமீன்
                     அஸ்ஸலாமு  அலைக்கும்  (வரஹ்)

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில்
ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;
 
(ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ''ஹன்ழலா எப்படி
இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் ''ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு. ''அல்லாஹ் தூயவன்! என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில்
இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம்,
பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான் ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும்
துணைவியருடனும் குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும்
வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலாவே!  (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள். நூல் - முஸ்லிம் எண்; 5305


மேற்கண்ட பொன்மொழியில் இரு சிறந்த நபித் தோழர்கள்களான அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] ஆகியோர் அமல்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் அச்சத்தில் சிறந்தவர்கள். எனினும் அல்லாஹ்வின் தூதரோடு  இருக்கும் போது உள்ள மார்க்க நினைவுகள் மறுமை அச்சம் நமது குடும்பத்தாரோடும், உலக வியாபார நிலைகளில் ஈடுபடும் போதும் இருப்பதில்லையே! என்று கவலை கொள்கிறார்கள். நமது இந்த இரண்டு நிலைப்பாடு நயவஞ்சகத்தின் அடையாளமோ என அச்சம் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் விரைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், ''சில நேரம் மறுமை நினைவு, சில நேரம் உலக நினைவு என்பது இயல்பானதுதான்'' என்று ஆறுதல் கூறியபின் தான அமைதியடைகிறார்கள் என்றால்,  மார்க்கத்திற்காக தங்களை  முழுமையாக அர்பணித்த நல்லறத் தோழர்களே தங்களின் அவசியமான உலக செயல்பாடுகள்  எங்கே மார்க்கத்திற்கு முரனாகிவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள் என்றால், அமல்களில் பலவீனத்தையும், உலக ஆசாபாசங்களில் அதிக நேரத்தையும் செலவிடும் நாம் எந்த அளவிற்கு கவலை கொள்ள வேண்டும்? நாம் அவ்வாறு கவலை கொண்டதுண்டா? நமது ஒவ்வொரு அசைவும் மார்க்கத்தோடு பொருந்துகிறதா என சீர்தூக்கிப் பார்த்து வாழ்ந்த அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.
                 Thanks  To  ;  http://sahaabaakkal.blogspot.com/

திங்கள், ஆகஸ்ட் 15, 2011


நன்றி ;  http://www.satyamargam.com/

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَدَعْ قَوْلَ ‏ ‏الزُّورِ ‏ ‏وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
"யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை" (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903).
சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.
சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.
அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
சொர்க்கத்தில் ரய்யான்என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி - 1896).
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الصِّيَامُ ‏ ‏جُنَّةٌ ‏ ‏فَلَا ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَخُلُوفُ ‏ ‏فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي ‏ ‏الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ‏
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பெச்சுகளைப் பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஒரு நோன்பாளியைத் தீயசொல்லால் திட்டினாலோ வீண் வம்புக்கு வந்தாலோ "நான் நோன்பாளி" என்று அவர் இருமுறை கூறிவிடவும். என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம், அல்லாஹ்வின் கணிப்பில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறினான்: எனக்காக நோன்பாளி தம் (ஹலாலான) உணவையும் குடிப்பையும் உடலிச்சையையும் துறந்து விடுகிறார். (அவரது) நோன்பு எனக்கு மட்டுமே உரியது.அதற்கு நானே கூலி வழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்) ஒரு நன்மை என்பது பத்து மடங்குகள் பெருகக் கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .
பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக்  குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.
மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!
- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்

சனி, ஆகஸ்ட் 13, 2011

          உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ
                                                          ஜாஃபர் அலி

1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.
புஹாரி :247 பராவு இப்னு ஆஸிப் (ரலி) .
1735. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ª ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6320 அபூஹுரைரா (ரலி).
1736. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7383 இப்னு அப்பாஸ் (ரலி).
1737. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும்
மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
புஹாரி :6398 அபூமூஸா (ரலி).
1738. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை” என்று கூறினார்கள். புஹாரி : 4114 அபூஹூரைரா (ரலி).
புஹாரி : 4114 அபூஹூரைரா (ரலி)
.நன்றி . http://www.islamkalvi.com/

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் பாலைவனக்கப்பல்
ஏனென்றால்,  ‘சஃபீனத்-அஸ்-ஸஹாராஎன்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும்தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பானகப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம்பாலைக்கு ஒட்டகபிரயாணம்என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது…., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு…. எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ…..ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து சுபஹானல்லாஹ்சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்உணவில்லாமல்பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரைதன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்ததுஎன்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%- இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்கேட்கவே வேண்டாம்அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10 நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோதன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன்விசேஷ லிவர்ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசுசிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது /சி செய்யப்பட்டகுளுகுளுஇடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரிபாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..!
அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்றுமணற்புயல்பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன்கையால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மண லோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள  நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!
அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாக உண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியதுஎன்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும்பரிணாம உலகம்’, ‘ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றதுஎன்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, ‘இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடைஎன்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்..
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?” (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே…! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில் உணராலாம்.
References:-ஒய்வு பெற்ற பேராசிரியர் T.A.M.ஹபீப் முஹம்மது அவர்கள், (விலங்கியல் துறை, காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்) சென்ற வருடம் எழுதி வெளியிட்டஅறிவியல் வழிகாட்டி அல்குர்ஆன்எனும் நூல்.